இனி ரேசன் கடைகளில் எலெக்ட்ரானிக் தராசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:ரேஷன் கடைகளில் இனிமேல் மின்னணு தராசுகளை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வர் கருணாநிதி பல்வேறு துறைகளின் பணிகளை துறைவாரியாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்.

பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதில் அனைத்துத் துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இணைய தளத்தில் ரேஷன்கார்டு விவரங்கள்:

இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இதுவரை அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள ரேஷன் அட்டைகளின் விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் இதுவரை ரேஷன் கார்டுகளுக்கு பெறப்பட்ட மனுக்களுக்கு கார்டுகள் அச்சடித்துக் கொடுக்கப்படும்.

இனிமேல் ரேஷன் கார்டு கோரி வரும் மனுக்களுக்கு 2 மாத கால அவகாசம் எடுத்து கார்டு வழங்கப்படும். போலியாக இருக்கும் குடும்ப அட்டைகளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எலக்ட்ரானிக் தராசு:

ரேஷன் கடைகளில் நடக்கும் எடை குறைவை தடுக்க அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எலக்ட்ரானிக் தராசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்துக்குள் இந்த தராசுகள் அனைத்து ரேசன் கடைகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+