பிரதீபா பதவியேற்பு-கருணாநிதி டெல்லி பயணம்
சென்னை:பிரதீபா பாட்டீல் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி இன்று மாலை டெல்லி செல்கிறார்.
நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக நாளை பிற்பகலில் பிரதீபா பாட்டீல் பதவியேற்கவுள்ளார். இதில் மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
முதல்வர் கருணாநிதியும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மாலை அவர் டெல்லி கிளம்புகிறார்.
நாளை நடைபெறும் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் கருணாநிதி வருகிற 26ம் தேதி மகள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இரு நிகழ்ச்சிகளையும் முடித்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இடதுசாரித் தலைவர்களை முதல்வர் கருணாநிதி சந்திக்கிறார். 27ம் தேதி தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கருணாநிதி சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications