டி.வி வெடித்து சிதறியது: டிரைவர் பலி!
மதுரை:8 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த டிவியை சுத்தப்படுத்தி மின் இணைப்பு கொடுத்தபோது அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் கால்நடைத்துறை டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை எஸ்.எஸ்.காலனியில் வசித்து வந்தவர் முனியசாமி. 45 வயதான இவர் கால்நடைத்துறையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவரது வீட்டில் ஒரு டிவி இருந்தது. கடந்த 8 வருடங்களாக இது இயங்கவில்லை.
இந்த நிலையில் நேற்று டிவியை எடுத்து சுத்தப்படுத்தினார் முனியசாமி. பின்னர் அதன் ஒயரை சரி செய்து ஸ்விட்ச் போட்டுள்ளார். அப்போது பலத்த சப்தத்துடன் டிவி வெடித்துச் சிதறியது.
வெடித்துச் சிதறியதில் அதனுள் இருந்த பகுதிகள் முனியசாமியின் உடலில் பாய்ந்தன. படுகாயமடைந்த முனியசாமி தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார்.
டிவிக்கு சரியாக மின் இணைப்பு கொடுக்காமல் தவறாக இணைப்பு தந்ததால், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு டிவி வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications