விடுதலை ஆனார் மோனிகா பேடி
ஹைதராபாத்:போலி பாஸ்போர்ட் வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தாதா அபு சலீமின் காதலியும், நடிகையுமான மோனிகா பேடி இன்று ஆந்திர சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அபு சலீமுடன் தலைமறை வாழ்க்கை வாழ்ந்து வந்த மோனிகா பேடி கடந்த 2002ம் ஆண்டு போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சலீமுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் இருவரையும் சிபிஐ அதிகாரிகள் இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர்.இந்தியா கொண்டு வரப்பட்ட மோனிகா பேடி மீது போலி பாஸ்போர்ட் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக போபால் மற்றும் ஹைதராபாத் நீதிமன்றங்களில் அவர் மீது இரு வழக்குகள் தொடரப்பட்டன.
ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மோனிகா பேடிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மோனிகா பேடி அப்பீல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்தது.
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மோனிகா. இந்த நிலையில், போபால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு கோரியிருந்தார் மோனிகா பேடி. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து ஜூலை 18ம் தேதி மீண்டும் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மோனிகா பேடி.
இந்த நிலையில் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார் மோனிகா பேடி. தனது பாஸ்போர்ட்டை மோனிகா பேடி ஒப்படைக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தனது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டதாக மோனிகா பேடி தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த சிபிஐ நீதிமன்றம் மோனிகாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் மோனிகா. அவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மோனிகா பேடியை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை ஹைதராபாத் மகளிர் சிறையிலிருந்து மோனிகா பேடி விடுதலை செய்யப்பட்டார். அவரை தந்தை பிரேம்குமார் பேடி, உறவினர் புருஷோத்தம் பேடி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
விடுதலைக்குப் பின்னர் மீண்டும் நடிக்கப் போவதாக ஏற்கனவே மோனிகா பேடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications