சினிமா வினியோகஸ்தரிடம் ரூ. 2.2 லட்சம்பணம் கொள்ளை- டிரைவர் கைது
சென்னை:வேலை பார்த்த இடத்திலேயே ரூ. 2.2 லட்சத்தை திருடிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் காளப்பன்(51) திரைப்பட விநியோகஸ்தராக இருக்கிறார்.
இது தவிர பல தியேட்டர்களை லீசுக்கு எடுத்தும் நடத்தி வருகிறார். வல்லவன், தாமிரபரணி ஆகிய படங்களை செங்கல்பட்டு ஏரியாவில் வினியோகம் செய்தவர்.
ஹாரி பாட்டர் பட விநியோக உரிமையை வாங்க இருக்கிறார்.
கடந்த 12ம் தேதி தனது வீட்டிலிருந்து ரூ. 2.28 லட்சம் பணத்துடன் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு காரில் கிளம்பினார். அதை இவரது டிரைவர் வெங்கடேஷ் (28) ஓட்டிச் சென்றார்.
வழக்கமாக காரை மெளண்ட் ரோட்டில் காசினோ தியேட்டர் அருகில் நிறுத்திவிட்டு இறங்கிச் செல்வார் காளப்பன்.
வெங்கடேசிடம் பணத்தை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சென்றார். ஆனால் திரும்பி வந்தபோது டிரைவர் பணத்தை எடுத்துக் கொண்டு காரையும் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்.
இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் காளப்பன். டிரைவர் வெங்கடேஷ் 10 நாட்களுக்கும் முன்புதான் இவரிடம் வேலைக்கு சேர்ந்தாராம்.
இதையடுத்து தனிப்படை போலீசார் வெங்கடேஷைத் தேடி அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் சென்று விசாரித்தனர்.
அவர் மலேசியா செல்ல திட்டமிட்டிருந்ததும் , அதற்காக வெளிநாடு அழைத்து செல்லும் ஏஜெண்டிடம் பணத்தை கொடுக்க ராமநாதபுரம் வர இருப்பதும் தெரியவந்தது.
ஆனால், அவர் சென்னையில் தான் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதைடுத்து போலீசார் ரயில், பஸ் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் சென்னைகோயம்பேடு பஸ் நிலையத்தில் வைத்து டிரைவர் வெங்கடேஷ் மாட்டினார்.
வெங்கடேஷிடமிருந்து ரூ. 1.54 லட்சம் மீட்கப்பட்டது. மீதிப்பணம் ரூ. 74,000த்தை நண்பர்களுடன் சேர்ந்து குடித்தும், பெண்களோடு உல்லாசமாகவும் இருந்து செலவழித்துவிட்டதாக போலீசில் கூறியுள்ளார் வெங்கடேஷ்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications