எல்காட் வசம் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம்?
சென்னைதமிழக அரசு திட்டமிட்டுள்ள கேபிள் டிவி கட்டமைப்பு நிறுவனத்தை எல்காட் நிறுவனம் ஏற்று நடத்தவுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான ஆய்வறிக்கையை எல்காட் நிறுவனம் அரசிடம் வழங்கியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், கேபிள் டிவி நிறுவனங்களை கையகப்டுத்தி அரசே கேபிள் டிவியை நடத்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதை திமுக கடுமையாக எதிர்த்தது.
இந்த நிலையில் சமீபகாலமாக கேபிள் டிவியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என பாமக கோரி வருகிறது. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸிடம், தமிழக அரசு ஆலோசனை கேட்டது.
இதைத் தொடர்ந்து அரசே கேபிள் டிவி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு நடந்து வருவதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு திட்டமிட்டுள்ள கேபிள் டிவி நிறுவனத்தை அரசின் எல்காட் நிறுவனமே நடத்தும் எனத் தெரிகிறது. அரசின் கேபிள் டிவி திட்டம் தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்த திட்ட அறிக்கையை அரசிடம் எல்காட் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து எல்காட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் வருவாய் கிராமங்களை இணைக்கும் வகையில், ஆப்டிக்கல் பைபர் கேபிள்கள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் கேபிள் டிவி ஒளிபரப்பை நடத்த முடியும்.
இந்த கேபிள்கள் மூலம், தொலைபேசி, இன்டர்நெட் மற்றும் கேபிள் டிவியை ஒரே நேரத்தில் வழங்கலாம்.
மேலும் இந்த திட்டத்தை விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படுத்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியையும் நாட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
விரைவில் இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications