மாற்றப்படும் ஜனாதிபதியின் இணையத் தளம்:கலாம் பதவி கால கட்டுரைகள் மாயம்
டெல்லி:ஜனாதிபதியின் இணையத் தளம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அதில் அப்-லோட் செய்யப்பட்டிருந்த ஏராளமான கவிதைகள், கட்டுரைகள் என்ன ஆகும் என்று தெரியவில்லை.
கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது http://www.presidentofindia.nic.in/ இணையத் தளத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனுப்பிய கவிதை, கட்டுரைகளை தொகுப்பாக வெளியிட்டிருந்தார். இந்த வெப்சைட்டில் குழந்தைகளுக்கான பகுதியையும் உருவாக்கினார்.
கலாமின் காலத்தில் இந்த இணையத் தளத்தை தினமும் 2.5 லட்சம் பேர் வரை பார்த்து வந்தனர். சில நாட்களில் ஒரே நாளில் 5 லட்சம் பேர் வரை இந்த இணையத் தளத்துக்கு விசிட் செய்ததும் உண்டு.
கடந்த 24ம் தேதி கலாம் அவர்கள் ஓய்வு பெற்றதால் ஜூலை மாதம் மட்டும் இந்த இணைய தளத்தை ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர்.
இந் நிலையில் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் பதவியேற்றுள்ள நிலையில் ஜனாதிபதியின் இந்த இணைளயத் தளம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜனாதிபதி மாளிகையின் உயரதிகாரி கூறும்போது,
கலாம் அவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் அவருடைய வெப்சைட் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இனிமேல் ஜனாதிபதியின் வெப்சைட்டில் புதிய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கட்டுரைகள் தான் இடம் பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications