கோவா-ஜனாதிபதி முன் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு:பாஜக அதிரடி

Subscribe to Oneindia Tamil

கோவா:கோவாவில் பெரும்பான்மையை இழந்துவிட்ட காங்கிரஸ் ஆட்சியில் நீடிக்க பல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது.

இதையடுத்து தங்களுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களுடன் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்திக்க பாஜக முடிவு செய்துள்ளது.

40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும் கிடைத்தன.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களை கைப்பற்றியது. மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 2 இடத்திலும், கோவா பாதுகாப்பு முன்னணி 2 இடத்திலும், கோவா ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வென்றன. இதைத் தவிர சுயேட்சைகள் 2 இடங்களில் வென்றனர்.

சுயேட்சைகள் மற்றும் மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சியின் (எம்.ஜி.பி)எம்எல்ஏக்கள் ஆதரவுடன் திகாம்பர் காமத் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அைமத்தது.

காங்கிரஸ் அரசுக்கு கோவா ஜனநாயக கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது. 23 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

இந் நிலையில் சுயேட்சை எம்எல்ஏக்களும், மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சி எம்எல்ஏக்களும் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர்.

மேலும் காங்கிரசைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ விக்டோரியா ஃபெர்னாண்டஸூம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

எம்எல்ஏக்கள் பலம் 19 ஆக குறைந்ததால் (ஆட்சியில் நீடிக்க குறைந்தபட்சம் 20 பேரின் ஆதரவு வேண்டும்) கோவாவில் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த கட்சியும் சுயேட்சை எம்எல்ஏ அனில் சால்கோவோங்கர், மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தன.

இதையடுத்து மனோகர் பாரிக்கர் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமானது.

ஆனால், இதைத் தடுக்க காங்கிரஸ் பல வழிகளிலும் முயன்று வருகிறது. காங்கிரஸைச் சேர்ந்த சபாநாயகர் பிரதாப் சிங் ரானே சட்டசபையை கூட்டாமல் இழுத்தடித்து வருகிறார்.

அதே போல ஆளுநர் ஜமீரும் (இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார்) இந்த விஷயத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இதையடுத்து 21 எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்றுள்ளார் பாரிக்கர். மூத்த பாஜக தலைவர்களுடன் சென்று ஜனாதிபதி பிரதீபாவை சந்திக்கவும், அவர் முன் அணி வகுத்துக் காட்டவும் முடிவு செய்துள்ளார் பாரிக்கர்.

பீகார், ஜார்க்கண்டில் செய்தது போன்ற குழப்பத்தை கோவாவிலும் செய்ய காங்கிரஸ் முயல்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+