சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு செல்ல வசதியாகசென்னை To மயிலாடுதுறை சிறப்பு ரயில்
சென்னை:ஆகஸ்ட் 5ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற இருப்பதால் அன்றைய தினம் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
ஆகஸ்ட் 5ல் சனிப்பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இதையொட்டி ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரயில் (ரயில் எண் 0677) மயிலாடுதுறைக்கு புறப்படும்.
இந்த சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும்.
மறுநாள் ஆகஸ்ட் 5ம் தேதி, மயிலாடுதுறையிலிருந்து இரவு 11.30க்கு இந்த ரயில் புறப்பட்டு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 9.45க்கு சென்னை வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்றிலிருந்து (சனிக்கிழமை) ஆரம்பமாகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications