2வது டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி
நாட்டிங்காம்:இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இங்கிலாந்துடன் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. முதல் போட்டி மழை காரணமாக இந்தியாவைக் காப்பாற்றி டிராவில் முடிய உதவியது.
![]() |
இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் நகரில் நடந்து வந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடியதால் இப்போட்டியில் இந்தியாவின் கை ஓங்கியது. இன்று 5வது மற்றும் இறுதி நாள் போட்டி நடந்தது.
73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இன்றைய ஆட்டத்தை இந்திய வீரர்கள் எதிர்கொண்டனர். நேற்றைய விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் என்ற நிலையில் இன்று காலை இந்திய வீரர்கள் தங்களது ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
![]() |
தொடக்க வீரர்கள் திணேஷ் கார்த்திக், வாசிம் ஜாபர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய விக்கெட்டுக்களை இழந்த இந்தியா தனது வெற்றி இலக்கைத் தொட்டது.
இன்று வீழ்ந்த மூன்று விக்கெட்டுக்களையும் கிறிஸ் டிரம்லெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணிக்கு கடந்த 13 மாதங்களில் கிடைத்துள்ள முதல் டெஸ்ட் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் ராகுல் டிராவிட் வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அவர் 11 ரன்கள் எடுத்தார். கங்குலி 2 ரன்கள் சேர்த்தார்.
1986ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணி இங்கிலாந்தில் பெறும் 2வது டெஸ்ட் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. 3வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்குகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்














Click it and Unblock the Notifications