சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி:சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நீதிபதி அசோக்குமாரை நியமித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அசோக் குமார் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் சாந்தி பூஷன் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
![]() |
அதில், நீதிபதி அசோக்குமாரை நிரந்தர நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனக் குழு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் அதையும் மீறி அசோக்குமார் நிரந்தர நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயரை ஏற்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவித்தது சட்டவிரோதமானதாகும். விதிமுறைகளை மீறி உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட யாருக்கும் அதிகாரம் கிடையாது.
எனவே அசோக்குமாரின் நியமனம் சட்டவிரோதமானதாகும். மூத்த நீதிபதிகள் அடங்கிய நீதிபதி நியமனக் குழுவின் முடிவை மீறி அசோக் குமார் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அரிசித் பச்சாயத், நீதிபதி டி.கே.ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், கடந்த 1999ம் ஆண்டு முதல் உயர்நீதிமன்றங்களில் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பட்டியல் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், உயர்நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலையும், அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டது குறித்த விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி அசோக் குமார் சமீபத்தில் தனது மணி விழாவையொட்டி முதல்வர் கருணாநிதியை தனது குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications