தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது:திருப்பதி, கோவை ரயில்கள் நேரம் மாற்றம்
சென்னை:சென்னை அருகே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு தடம் புரண்டது. இதனால் ரயில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் 4 ரயில்களின் நேரம் இன்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 10 மணியளவில் பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது.
இதனால் அந்த வழியாக செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சுமார் 5 மணி நேரத்துக்குப் பின்னரே தடம் புரண்ட இரண்டு பெட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
![]() |
இதனால் ஏற்காடு, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்பட பல ரயில்கள் தாமதமாகக் கிளம்பிச் சென்றன.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர்.
இன்றும் 4 ரயில்கள் நேரம் மாற்றம்:
இந் நிலையில் சென்டரலில் இருந்து இன்று பகல் 1.50க்கு கிளம்ப வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் (எண்-6053) மாலை 4.30க்குக் கிளம்பிச் சென்றது.
சென்னை-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (6042) மாலை 4.10க்குப் பதிலாக மாலை 6.30க்குப் புறப்பட்டது.
அதே போல சென்னை-காக்கிநாடா சிர்கார் எக்ஸ்பிரஸ் (எண்-6043) மாலை 5.45க்குப் பதிலாக இரவு 8.30 மணிக்குப் புறப்படும்.
மேலும் கோவை-சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் (எண்-2676) பகல் 2.05க்குப் பதிலாக இரவு 8 மணிக்குப் புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications