ரெளடி வெள்ளை ரவி எண்கெளன்டரில் காலி

Subscribe to Oneindia Tamil

ஒசூர்:தமிழகத்தைக் கலக்கி வந்த பிரபல ரெளடி வெள்ளை ரவி போலீஸ் எண்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த கொலைகள், ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து வழக்குகளில் தொடர்புடையவன் வெள்ளை ரவி.

சமீப காலமாக எண்கெண்டரில் ரெளடிகளை போலீசார் ஒழித்துக் கட்ட ஆரம்பித்த நிலையில் ரவி தலைமறைவானான். சென்னை மத்திய சிறையில் 1999ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஜெயிலர் ஜெயக்குமாரை அடித்துக் கொன்றதிலும் இவனுக்கு முக்கிய தொடர்புண்டு.

இதையடுத்து பல முறை குண்டர் சட்டதிலும் கைதான வெள்ளை ரவி திருந்தவே இல்லை. தொடர்ந்து தனது கிரிமினல் செயல்களில் ஈடுபட்டு வந்தான்.

இந் நிலையில் ஒசூர் அருகே அவன் பதுங்கியிருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தபோது போலீசாரை அவன் தாக்க முயன்றார். இதையடுத்து போலீசார் சுட்டதில் அவன் பலியானான்.

இந்த எண்கெளன்டரில் ரவியின் கும்பலைச் சேர்ந்த இன்னொரு ரெளடியும் பலியானான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+