மனைவியுடன் சிரித்து பேசிய சகலைகன்னத்தை கடித்துத் துப்பிய புது மாப்பிள்ளை!
மதுரை:மதுரை அருகே, தனது மனைவியுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சகலை மீது ஆத்திரமடைந்து அவரது கன்னத்தைக் கடித்துத் துப்பினர் அந்தப் பெண்ணின் கணவர்.
மதுரை திருமங்கலம் அருகே உள்ளது சின்னசொர்ணகுளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி. சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ஆடி சீர் விருந்துக்காக மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்தார் முத்துப்பாண்டி. அங்கு அவரது சகலை (மனைவியின் சகோதரி கணவர்) விருமாண்டியும் குடும்பத்தோடு வந்திருந்தார்.
அப்போது விருமாண்டி, முத்துலட்சுமியிடம் சிரித்துச் சிரித்துப் பேசியுள்ளார். இதைப் பார்த்த முத்துப்பாண்டிக்கு கோபம் வந்தது. தனது மனைவிக்கும், சகலைக்கும் கள்ளத் தொடர்பு இருக்குமோ என சந்தேகமடைந்தார் அவர்.
இதையடுத்து கோபத்துடன் விருமாண்டி மீது பாய்ந்த முத்துப்பாண்டி அவரது கன்னத்தை பலமாக கடித்தார். பின்னர் வாயுடன் வந்த கன்னத்துச் சதையை துப்பி விட்டு தப்பி விட்டார்.
பலத்த காயமடைந்த விருமாண்டி மயக்கமடைந்தார். உடனடியாக அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். போலீஸிலும் இதுகுறித்து புகார் தரப்பட்டது. அதன் பேரில் போலீஸார் கன்னக் கடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications