தமிழக போலீஸ் விசாரித்த மிகப்பெரிய வழக்கு!
சென்னை:கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தான் தமிழக போலீஸ் நடத்திய மிகப் பெரிய வழக்காகும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு ஆகியவற்றை சிபிஐ தான் விசாரித்தது.
அதேபோல் கோவை குண்டுவெடிப்பு வழக்கையும் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இரு மாநிலங்கள் (கேரளா) சம்மந்தப்பட்டிருப்பதால் தமிழக போலீசாரால் இந்த வழக்கையெல்லாம் சரியாக விசாரிக்க முடியாது என்று கூறப்பட்டது.
ஆனால், இதை தமிழக சிபிசிஐடி போலீசாரே விசாரித்தனர்.
சிபிசிஐடி தனிப்படை புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.ராஜசேகரன் தலைமையில் 50 பேர் கொண்ட தனிப்படை மிகச் சிறப்பாக விசாரணை நடத்தியது.
மிகத் துரிதமாக செயல்பட்ட போலீசார் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட அனைவரையும் ஒரே வருடத்துக்கு கைது செய்து காட்டினர்.
தமிழக போலீஸ் வரலாற்றிலேயே விசாரிக்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு இது தான்.












Click it and Unblock the Notifications