சாஹர் பியரை தோற்கடித்தார் சானியா!
சாண்டியாகோ (கலிபோர்னியா):அமெரிக்க ஹார்ட் கோர்ட் டென்னிஸ் அரங்கைக் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் சானியா மிர்ஸா, அக்யூரா கிளாசிக் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் முன்னணி வீராங்கனை சாஹர் பியரை தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு இந்த ஆண்டு ஹார்ட் கோர்ட் (களிமண் தரை) டென்னிஸில் அடுத்தடுத்து வெற்றிகள் குவிந்து கொண்டிருக்கின்றன.சமீபத்தில் முடிந்த ஸ்டான்போர்ட் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறினார். இரட்டையர் பட்டத்தை வென்றார். அவர் வெல்லும் சர்வதேச அளவிலான 2வது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாண்டியாகோ நகரில் தொடங்கியுள்ள அக்யூரா கிளாசிக் டென்னிஸ் போட்டியிலும் சானியா அசத்த ஆரம்பித்துள்ளார்.
ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 12வது நிலை வீராங்கனையும், சானியாவின் இரட்டையர் பிரிவு பார்ட்னருமான இஸ்ரேலின் சாஹர் பியரும் மோதினர்.
இப்போட்டியில் 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் சானியா வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
சானியா தற்போது உலக பெண்கள் டென்னிஸ் ரேங்கிங்கில் 31வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications