தமிழகத்தில் ரூ.14,891 கோடி வருமான வரி வசூல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:இந்த வருட வருமான வரி வசூலில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது நேற்றோடு முடிவடைந்தது.

அனைத்து வருமானவரி அலுவலகங்களிலும் இதற்காக சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் மட்டும் 40 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டன. கடந்த மாதம் 27 முதல் 31ம் தேதிவரை மட்டும் 1.66 லட்சம் பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர்.

சென்னையில் நேற்று மட்டும் 53,058 பேர் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 56,583 பேர் கூடுதலாக வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2004-2005ம் ஆண்டு தமிழகத்தில் ரூ. 8,344 கோடி வரி வசூல் ஆனது.

2005-06ம் ஆண்டில் ரூ.10,861 கோடி வசூலானது.

இந்த நிதி ஆண்டில் (2006-2007) ரூ.14,891 கோடி வசூலாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ.11,504 கோடி ரூபாய் வருமான வரி வசூலாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+