குடிநீர்த் தகராறு: பொதுமக்களை தாக்கியபோலீஸ் - ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை
தென்காசி:நெல்லை மாவட்டம் தென்காசி அருகே குடிநீர்ப் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், பொதுமக்களைத் தாக்கிய போலீஸாரைக் கண்டித்து கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் சொக்கம்பட்டி கிராமத்தில் காந்தி நகர் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்டது. இதையடுத்து வந்த போலீஸார் சமாதானம் பேசாமல் தடியால் அடித்து பொதுமக்களை விரட்டியுள்ளனர்.
![]() |
இதையடுத்து அப்பகுதி மக்கள் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து அப்பகுதி மக்கள் சார்பில் கோட்டாட்சியர் ரமண சரஸ்வதியிடம் தமிழ்செல்வி என்பவர் அளித்துள்ள புகாரில்,
இன்று (நேற்று) அதிகாலை 3.00 மணி அளவில் எங்கள் தெருவிற்கு கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், சொக்கம்பட்டி புற காவல் நிலைய ஏட்டு நேசமணி மற்றும் பெயர் தெரியாத நான்கு காவலர்களுடன் வந்து எங்கள் ஊரை சேர்ந்த நாட்டாமை மாடசாமி உள்பட நான்கு பேர் மீது வழக்கு இருப்பதாக கூறி எங்கள் வீடுகளில் வந்து கதவை எட்டி உதைத்து, ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டினர்.
நாங்கள் வெளியே வந்தபோது எங்களை அடித்து இழிவாக பேசினார்கள். அங்கு குடியிருந்து வரும் தமிழரசி, மாரியம்மாள், பேச்சியம்மாள், சைலா, முத்துலட்சுமி, இன்னொரு பேச்சியம்மாள், முத்துமாரி, இன்னொரு மாரியம்மாள், கருப்பசாமி ஆகியோரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டினர்.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு மன உளைச்சல் அடைந்து உள்ளோம். இதுதொடர்பாக கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், சொக்கம்பட்டி புற காவல் நிலைய ஏட்டு நேசமணி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.













Click it and Unblock the Notifications