துபாயில் மிராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு

Subscribe to Oneindia Tamil

துபாய்:துபாயில் ஈமான் அமைப்பின் சார்பில் புனித மிராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை (9ம் தேதி) இரவுத் தொழுகைக்குப் பின் இந்த சொற்பொழிவு நடக்கவுள்ளது.

துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லூத்தா ஜாமிஆ பள்ளிவாசலில் (குவைத் பள்ளி) இந்த நிகழ்ச்சி நடக்கும்.

ஈமான் அமைப்பின் தலைவரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை இயக்குனருமான சையத் எம்.சலாஹூதீன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார். இமாம் எம்.ஏ. காஜா முகம்மத் ஜமீலி மக்கி மன்பயீ, புனித மிராஜ் இரவு குறித்து சிறப்புரை நிகழ்த்துவார்.

பெண்களுக்கும் பள்ளிவாசலின் மேல் தளத்தில் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முகைதீனை 050 5853888 என்ற எண்ணிலோ, ஜமாத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீத் யாசினை 050 4753052/ 04-2661415 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+