கிருஷ்ணா நீர் புதன்கிழமை தமிழகம் வந்தடையும
சென்னை:ஆந்திராவில் கண்டேலறு அணைக் கட்டில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் வரும் புதன்கிழமை தமிழகத்தை வந்தடையவுள்ளது.
சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரைத் திறந்துவிடுமாறு ஆந்திர அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். இதையடுத்து தண்ணீரைத் திறந்துவிட ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையை நாளை மறு தினம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து 25 கி.மீ. தூரம் பயணித்து பூண்டி நீர்த் தேக்கத்தை தண்ணீர் வந்தடையும்.
கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 300 முதல் 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. வினாடிக்கு 1,000 கன அடியைத் திறந்துவிடுமாறு தமிழக பொதுப் பணித்துறையினர் கோரியுள்ளனர்.
இந்த கோரிக்கையை ஆந்திரம் ஏற்றுக் கொண்டுள்ளது.
பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து இந்த நீர் செங்குன்றம், செம்பரம்பாக்கம் நீர்த் தேக்கங்களுக்குத் திருப்பிவிடப்படும்.












Click it and Unblock the Notifications