அமிதாப், சரிகாவுக்கு தேசிய விருதுரங் தே பசந்திக்கு 4 - தமிழுக்கு 3!
டெல்லி:தேசிய அளவில் சிறந்த நடிகராக அமிதாப் பச்சனும், சிறந்த நடிகையாக சரிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சேரன், நவ்யா நாயர் நடித்த ஆடும் கூத்து படம் தமிழில் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.
2005ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. விருதுகளைத் தேர்ந்தெடுத்த விதம் குறித்து வழக்குகள் தொடரப்பட்டதால் விருது பெற்றவர் விவரங்களை வெளியிட தாமதம் ஏற்பட்டது.
2005ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிளாக் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அமிதாப்புக்கு விருது கிடைத்துள்ளது.
சிறந்த நடிகைக்கான விருது சரிகாவுக்குக் கிடைத்துள்ளது. பர்ஸானியா என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சரிகாவுக்கு விருது கிடைத்துள்ளது.
தமிழுக்கு மொத்தம் 3 விருதுகளே கிடைத்துள்ளன. தமிழில் சிறந்த படமாக டி.வி.சந்திரனின் ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது. சேரன், நவ்யா நாயர் இதில் நடித்துள்ளனர். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிருங்காரம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. அப்படத்திற்கு இசையமைத்திருந்த லால்குடி ஜெயராமன் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினையும், நடன அமைப்பாளராக சரோஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறை தேசிய திரைப்பட விருதுகளை பெரும்பாலும் இந்திக்காரர்களே அள்ளியுள்ளனர். சூப்பர் ஹிட் படமான ரங் தே பசந்திக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. தென்னிந்திய மொழிப் படங்களுக்குப் பெரிய அளவில் விருதுகள் கிடைக்கவில்லை.
மலையாளத்தில் சிறந்த படமாக தன்மத்ரா, கன்னடத்தில் சிறந்த படமாக தாயி, தெலுங்கில் சிறந்த படமாக பொம்மலாட்டா ஆகியவை தேர்வாகியுள்ளன.
விருதுகள் பெற்ற பிற கலைஞர்கள், படங்கள் பட்டியல்
சிறந்த இயக்குநர் - ராகுல் தோலாக்கியா (பர்ஸானியா)
சிறந்த படம் - கால்புருஷ்.
சிறந்த பொழுதுபோக்கு படம் - ரங் தே பசந்தி.
சிறந்த சிறுவர்களுக்கான படம் - ப்ளூ அம்பரல்லா.
சிறந்த பின்னணிப் பாடகர் - நரேஷ் ஐயர் (ரங் தே பசந்தி).
சிறந்த பின்னணிப் பாடகி - ஷ்ரேயா கோஷல் (பஹேலி)
சிறந்த ஒலிப்பதிவு - நகுல் காம்தே (ரங் தே பசந்தி)
சிறந்த எடிட்டிங் - பி.எஸ்.பாரதி (ரங் தே பசந்தி)
சிறந்த திரைக்கதை அமைப்பு - பிரகாஷ் ஜா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி (அப்ஹாரன்)
சிறந்த கலை இயக்குநர் - சி.பி.மோரே (தாஜ் மஹால் -ஏன் இடர்னல் லவ் ஸ்டோரி)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - அன்னா சிங், சபயசாச்சி முகர்ஜி.
சமூக கருத்துடன் கூடிய சிறந்த படம் - இக்பால் (இந்தி).
இந்திரா காந்தி விருது பெறும் சிறந்த படம் - பரீனிதா.
சிறப்பு நடுவர் விருது பெறும் சிறந்த நடிகர் - அனுபம் கெர் (மைனே காந்தி கோ நஹி மரா)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - சாய்குமார் (பொம்மலாட்டா)
மாநில மொழிகளில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டவை
தன்மத்ரா (மலையாளம்)
தாயி (கன்னடம்)
பொம்மலாட்டா (தெலுங்கு)
கடம் டோலே கிருஷ்ணா நாச்சே (அஸ்ஸாம்)
ஹர்பர்ட் (பெங்காலி)
டோம்பிவிலி பாஸ்ட் (மராத்தி)
கதாஹனத்ரா (ஒரியா)
பாகி (பஞ்சாபி)












Click it and Unblock the Notifications