20/20 கோப்பை-இந்திய அணிக்கு டோணி கேப்டன்!
மும்பை:தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 20/20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோணி நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடன் மோதும் ஒரு நாள் போட்டிக்கான அணியின் துணை கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் யாருக்கு எந்த நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்றே கூற முடியாது. அந்த அளவுக்கு திடீர் திடீரென அதிர்ஷ்டக் காற்று பளார் பளாரென வீசும். சிலரைக் காரணமே சொல்லாமல் மளார் மளார் என அடித்து விரட்டி விடுவதும் உண்டு.
இப்போது டோணிக்கு அந்த அதிர்ஷடக் காற்று வீசியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வருகிற செப்டம்பர் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை 20/20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
![]() |
இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று நட்சத்திர வீரர்களான சச்சின் டெடண்டுல்கர், ராகுல் டிராவிட், செளரவ் கங்குலி ஆகியோர் அறிவித்து விட்டனர்.
இந்த நிலையில் 20/20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு மும்பையில் நடந்தது. அதில், அணியின் கேப்டனாக டோணி தேர்வு செய்யப்பட்டார். துணை கேப்டனாக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டார்.
இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் நிரஞ்சன் ஷா அறிவித்தார். இந்தத் தொடரில் இந்திய அணியில் வேகப் பந்து வீச்சாளர் ஜாகிர் கான் இடம் பெற மாட்டார். அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாம்.
20/20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி விவரம்
டோணி (கேப்டன்), யுவராஜ் சிங் (துணை கேப்டன்), வீரேந்திர ஷேவாக், திணேஷ் கார்த்திக், கெளதம் காம்பீர், ஹர்பஜன் சிங், அஜீத் அகர்கர், ராபின் உத்தப்பா, ஸ்ரீசந்த், ஜோகிந்தர் சர்மா, இர்பான் பதான், யூசுப் பதான், ஆர்.பி.சிங், ரோஹித் சர்மா.
தற்ேபாது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 7 ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்துடன் மோதவுள்ளது. இதில் துணை கேப்டனாக டோணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியிலிருந்து பந்துவீச்சாளர் ஸ்ரீசந்த் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் முனாப் படேல் இடம் பெற்றுள்ளார்.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி விவரம்
ராகுல் டிராவிட் (கேப்டன்), டோணி (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், கங்குலி, திணேஷ் கார்த்திக், யுவராஜ் சிங், ரமேஷ் பொவார், ஜாகிர் கான், முனாப் படேல், பையூஷ் சாவ்லா, ஆர்.பி.சிங், கெளதம் காம்பீர், ரோஹித் சர்மா, ராபின் உத்தப்பா, அஜீத் அகர்கர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications