இரு பைக்குகள் மோதி 3 பேர் பலி
விழுப்புரம்:விழுப்புரம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
விழுப்பும் மாவட்டம் வானூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் முரளி (24). இவரது நண்பர் சிவக்குமார் (22).
இருவரும் அங்குள்ள ஒரு கல்குவாரியில் ஜேசிபி டிரைவராக வேலை பார்த்து வந்தனர். நேற்று இருவரும் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரி சென்று கொண்டிருந்தனர். அப்போது மயிலாடுதுறையைச் சேர்ந்த சந்திரன் மகன் செந்தில் முருகன்(27), கோதண்டராமன் மகன் ரவி (26) ஆகிய இருவரும் புதுவையில் இருந்து மயிலாடுதுறைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
இரவு 11-15 மணியளவில் இரண்டு வண்டிகளும் கரசானூர் என்ற இடத்தில் வந்தபோது, நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் 4 பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.இதில் பலத்த காயமடைந்த செந்தில் முருகன், முரளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் சிவக்குமார், ரவி இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் சிவக்குமார் இறந்து போனார். ரவியும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து வானுர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications