நிவாரணப் பணியாளர்களுக்கு பாதுகாப்புஐ.நா. தூதரிடம் இலங்கை உறுதி
கொழும்பு:கடும் சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் பகுதிகளுக்கு சர்வதேச நிவாரணப் பணியாளர்கள் எளிதாக செல்லவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இலங்கை வந்துள்ள ஐ.நா. தூதர் கூறியுள்ளார்.
ஐ.நா.வின் மனிதாபிமான விவகார மற்றும் அவசர கால மறுவாழ்வு ஒருங்கிணைப்பாளரான சர் ஜான் ஹோம்ஸ் கொழும்பு வந்துள்ளார். இலங்கைப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நீடித்து வரும் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களின் நிலை குறித்து ஆராயவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யவும் இலங்கை அரசுடன் பேச அவர் வந்துள்ளார்.
நான்கு நாள் பயணமாக வந்துள்ள ஹோம்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், போர் நடந்து வரும் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்புடன் நான் விவாதித்தேன்.
அப்போது பன்னாட்டு நிவாரணப் பணியாளர்கள், இந்தப் பகுதிகளுக்கு செல்வதற்கு எந்தத் தடையும் இருக்காது, ஏற்படுத்த மாட்டாது என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
அரசின் உத்தரவாதம் முழுமையாக, முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதை அரசு உறுதி செய்ய வேண்டும். பன்னாட்டு நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பு இலங்கையில் கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே இந்த விஷயத்தில் இலங்கை அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த 18 மாதங்களில் 30 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மிகவும் சிக்கலான, கடுமையான, அபாயகரமான சூழ்நிலையில் அவர்கள் பணியாற்றுகிறார்கள். எனவே இது பாதுகாப்பான ஒரு பணி அல்ல. ஆனால் யாருக்காக அவர்கள் பணியாற்ற வருகிறார்களோ அவர்களாலும், அரசு நிர்வாகத்தாலும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் நிவாரணப் பணியாளர்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் முட்டூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் போன்ற ஒன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா கோஷ்டியினரை செயலிழக்க வைக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபட வேண்டும். அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். இது உடனடியாக நடைபெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் கிழக்கு மாகாணத்தில் அரசினாலும், தொண்டு நிறுவனங்களாலும் நிவாரணப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.
நான்கு நாள் பயணமாக வந்துள்ள ஹோம்ஸ், அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட அரசுத் தரப்பினரை சந்தித்தார். மேலும், யாழ்ப்பாணம், கிழக்கு மட்டக்களப்பு பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications