சானியா மிர்ஸா போராடித் தோல்வி
லாஸ் ஏஞ்சலஸ்:லாஸ் ஏஞ்சலஸ் கிளாசிக் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா,பிரான்ஸ் வீராங்கனை விர்ஜீனி ரஸ்ஸனோவிடம் தோல்வியடைந்தார்.
அமெரிக்க டென்னிஸ் அரங்கை அசத்தி வரும் சானியா மிர்ஸா, லாஸ் ஏஞ்சலஸ் கிளாசிக் டென்னிஸ் போட்டியிலும் அசத்தி வந்தார்.முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான மார்ட்டினா ஹிங்கிஸை 3வது சுற்றில் வீழ்த்தி டென்னிஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சானியாவின் வெற்றிப் பயணத்தை பிரான்ஸ் வீராங்கனை விர்ஜீனி காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் தடுத்து நிறுத்தினார்.
ஹிங்கிஸை வீழ்த்திய தெம்புடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விர்ஜீனியை சந்தித்தார் மிர்ஸா. இப்போட்டியின் முதல் சுற்றில் விர்ஜீனி 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதனால் சானியாவுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.
தொடர்ந்து பல தவறுகளை அவர் செய்தார். இருப்பினும் விடா முயற்சியோடு அவர் விளையாடியதால் இருவரும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினர்.
இறுதியில், இருவரும் சம புள்ளிகள் பெற்றதால் செட் டை பிரேக்கருக்குப் போனது. இதிலும் சானியா கடுமையாகப் போராடினார். ஆனால் பதட்டத்தில் அவர் செய்த தவறு விர்ஜீனிக்கு சாதகமாகவே செட் 7-6 (8-6) என்ற கணக்கில் விர்ஜீனியிடம் சென்றது.
இதன் மூலம் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார் சானியா. போட்டிக்குப் பின்னர் அவர் பேசுகையில், நானும் சாதாரண மனுஷிதான். பதட்டம் எனக்கும் வரும். அதுவே இப்போது எனக்குப் பாதகமாகி விட்டது என்றார் சானியா.
கடந்த ஒரு மாதமாக முக்கியப் போட்டிகளில் விளையாடி வரும் சானியா உலக டென்னிஸ் அரங்கில் 30வது இடத்தில் உள்ளார். கடந்த போட்டிகளில் அவர் 5 முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த வாரம் தொடங்கவுள்ல டோரண்டோ ஒபன் டென்னிஸ் போட்டியில் அடுத்து சானியா பங்கேற்கவுள்ளார்.
அதன் பின்னர் நியூயார்க்கில் நடைபெறும் பாரஸ்ட் ஹில்ஸ் போட்டியில் பங்கேற்கிறார். அதன் பின்னர் கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை சந்திக்கவுள்ளார் சானியா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications