தென்காசி: ஆணையாளரை மாற்றக் கோரிவெளிநடப்பு செய்த யூனியன் சேர்மன்!!
தென்காசி:தென்காசி யூனியனில் நடைபெறும் பணிகளின் விபரத்தை அதிகாரிகள் தனக்கு தெரிவிப்பது இல்லை. எனவே ஆணையாளரை மாற்ற வேண்டும் என்று கூறி யூனியனின் தலைவரே உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து யூனியனின் தலைவரான தமிழ்ச்செல்வி கூறியதாவது:
![]() |
மனு நீதி நாளில் இரண்டு தொகுப்பு வீடுகள் கட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட நபர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
கலெக்டர் என்னிடம் கேட்டபோது அப்படி நிறுத்தவில்லை என்று கூறினேன். ஆனால் மாவட்ட கவுன்சிலர் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வேலை நிறுத்தப்பட்ட தகவலை மாவட்ட கவுன்சிலரிடம் தெரிவித்த மாவட்ட வளர்ச்சி அதிகாரி (இவர் தான் ஆணையாளரும் கூட) என்னிடம் தெரிவிக்கவில்லை.
உள்ளாட்சிதுறை அமைச்சர் வந்தபோதும் எனக்கு ஜீப் தரவில்லை.
இந்த ஆணையாளரை மாற்ற வேண்டும் என்று இரண்டு முறை மனு கொடுத்தோம். அதன்மீது கலெக்டர் விசாரித்தபோது சேர்மன் மற்றும் உறுப்பினர்கள் கான்ட்ராக்டர்களிடம் காசு வாங்கித் தர சொல்லுவதாக கூறி அவமானப்படுத்திவிட்டார்.
எனவே ஆணையாளரை மாற்றும் வரை எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்ற மாட்டோம் என்றார்.
இது குறித்து ஆணையாளர் வேலாயுதம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரி ஆகியோர் கூறியதாவது:
தொகுப்பு வீடு பணிகள் ஒரு மாதமாக ஆரம்பிக்கவில்லை. இதனால் மேலதிகாரிகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
யூனியனில் இரண்டு ஜீப்கள் உள்ளன. ஒன்றை மட்டும்தான் சேர்மனும், ஆணையாளரும் பயன்படுத்த முடியும்.
கிராம ஊராட்சி திட்டத்தில் உள்ள ஜீப்பை சேர்மன் பயன்படுத்த முடியாது. சேர்மன் பயன்படுத்தும் ஜீப் சட்டமன்ற பொது கணக்கு குழுவினருக்காக அனுப்பியதால் மனுநீதி நாள் முகாமிலிருந்து சேர்மனை திரும்ப அழைத்து வர முடியவில்லை.
தீர்மானங்களை நிறைவேற்றவில்லை எனில் நிர்வாகம் பாதிக்கும் சின்ன சின்ன பணிகளை கூட செய்ய முடியாமல் அரசு இயந்திரம் ஸ்தம்பிக்கும் என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications