காவிரியில் பெரும் வெள்ளம்-நீரில் மூழ்கிய கிராமங்கள்
திருச்சி:காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அரியலூர் அருகே 2 கிராமங்களில் நீர் புகுந்துவிட்டது.
நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 8 மாவட்டங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து அபரிமிதமான தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதையடுத்து அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 44 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 122.61 அடியாக உள்ளது.
இதனால் நாமக்கல், ஈரோடு மாவட்டங்ளில் ஆற்றங்கரையோரம் கிராமங்களை தண்ணீர் முழுமையாக சூழ்ந்துள்ளது.
இதையடுத்து இரு மாவட்டங்களிலும் கரையோரம் வசிக்கும் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், திருமானூர் அருகே இரண்டு கிராமங்கள் நீரில் மூழ்கிவிட்டன.
இங்கு வசித்து வருவோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அங்கு நடந்து வந்த கூட்டுக் குடிநீர்த் திட்டக் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. கட்டப்பட்டிருந்த பாலமும் இடிந்து போய் விட்டது.
தொடர்ந்து காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு நிலவுவதால், சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் அதிகாரிகள் 24 மணி நேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கரையோரம் வசிக்கும் பகுதிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். எத்தகைய நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
திருமண மண்டபங்கள், பள்ளிக் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications