காவிரியில் குளிக்க சென்ற இருவர் மாயம்!

Subscribe to Oneindia Tamil

கொடுமுடி:ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இருவரை வெள்ள நீர் அடித்துச் சென்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர்கள் தாஸ், சேக் பரீது. இவர்கள் இருவரும் நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வந்துள்ளனர்.

கொடுமுடி காவிரி ஆற்றில் எப்போதும் குளிப்பதற்கு அதிகளவு கூட்டம் இருக்கும். நேற்றைய தினம் ஆடி அமாவாசை என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் குளித்துவிட்டு செல்வதால் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது.

கூட்டம் அதிகமா இருப்பதால் சேக், தாஸ் இருவரும் நெரிசல் இல்லாத ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்கள் நீந்த முடியாமல் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் கொடுமுடியின்காவிரி ஆற்றின் ஆழமான பகுதிகளில் நீண்ட நேரம் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அவர்களை தேடும் பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+