உதயநிதி, சபரீசனுக்கு சரிபாதி.. மொத்தம் 32 துறைகள்! ஆதவ் அர்ஜுனா அடுக்கிய குற்றச்சாட்டு!
சென்னை: புதியதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான அரசு, கடந்த காலங்களில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்களை அடுக்கியிருக்கிறது. இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த திமுக ஆட்சியில் 32 துறைகள் பாதியாக பிரிக்கப்பட்டு வசூல் வேட்டை நடந்திருக்கிறது என்றும், அந்த பணம் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, "சட்டமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகள் பேசுவதை வெளியில் கொண்டுவர மாட்டார்கள். ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் பேசுவதை மட்டுமே கட் செய்து ஒளிபரப்புவார்கள். ஆனால், நாங்கள் அப்படி கிடையாது. எதிர்க்கட்சிகள் என்ன பேசுகிறார்கள் என்பதையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கிறோம். வெளிப்படைத்ததன்மையாக இருக்க விரும்புகிறோம்.

அவை மரபு
நாங்கள் எதிர்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக பார்க்கவில்லை. ஆளுநர் உரை குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் பேசுவார்கள். திமுக எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை மீறி ஒருமையில் பேசும் பேச்சுகள் பார்த்திருப்பீர்கள்.
முதல்வர் ஒவ்வொரு நாளும் 5 மணி நேரம் பொறுமையாக அமர்ந்து குறிப்புகளை எடுக்கிறார். ஆனால், முதல்வர் பேசவில்லை என்று அவருக்கு எதிராக ஒரு பிம்பத்தை திமுகவினர் உருவாக்குகின்றனர். அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய பின்னர்தான் முதலமைச்சர் பதிலளித்து பேசுவார். இதுதான் அவையின் மரபு. இதுவரை எந்த முதல்வருக்கும் இல்லாத தைரியம் முதல்வர் விஜய்க்கு இருக்கிறது.
கட்சி நிதி
அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று நினைத்து, சட்டசபையில் நிகழ்வுகளை நேரலை செய்து வருகிறார் முதலமைச்சர் விஜய். கடந்த 4 நாட்களாக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை விசிக தலைவர் திருமாவளவன் பார்க்க வேண்டும். கொளத்தூர் என்று சட்டசபையில் சொல்லக்கூடாதா? முதல்வர் கட்சி நிதி என்றுதான் சொன்னார். அனைத்து கட்சிகளும் இருக்கையில்.. திமுக மட்டும் ஏன் எழுந்தார்கள்? அவர்களுக்கு தெரியும்.
அனைத்து துறைகளிலும் கட்சி நிதி இருக்கிறது. துறை ரீதியாக ஊழலுக்கு திட்டம் தீட்டி இருந்தார்கள். திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறையில் தனியார் பள்ளி குடும்பத்தை புதுப்பிக்க.. ஒவ்வொரு பள்ளியிடமிருந்து ரூ.25 லட்சம் நிதி வாங்கி இருக்கிறார்கள். இது பொது மக்களுக்கு தெரியும்.
வெளிநடப்பு ஏன்?
சட்டமன்றத்தில்.. முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு பிறகு வேறு யாரும் பேச முடியாது. ஆனால், சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அவகாசம் தருகிறேன் என்றார். கட்சி நிதி, குடும்ப நிதி என்று சொன்னாலே.. திமுக என்று அனைவருக்கும் தெரியும். இதை பேசுவதற்கு உதயநிதிக்கு நேர்மையும், துணிச்சலும் இல்லை. வெளிநடப்பு செய்த உதயநிதி செய்தியாளர்களுடன் பேசியதை சட்டசபையில் பேசி இருக்கலாம்.
32 துறைகள்
உதயநிதிக்கு தெரியும், 32 துறைகளில் தலா 16 துறைகள் என பிரித்து.. உதயநிதிக்கும், மாப்பிள்ளை சபரீசனுக்கும் அமைச்சர்களும் வசூலித்து கொண்டு போய் கொடுத்தார்கள்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications