கருணாநிதி தொகுதியின் பெயர் மாறியது
சென்னை:முதல்வர் கருணாநிதியின் சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதியின் பெயர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என்று மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட தொகுதிகளின் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மறு சீரமைக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டசபை தொகுதிகளின் இறுதி நிலவரங்கள் பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
மறு சீரமைப்பு செய்யப்பட்ட தொகுதிகளின்படி 7 எம்.பி. தொகுதிகளும், 44 சட்டசபைத் தொகுதிகளும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பர், நாகப்பட்டனம், தென்காசி ஆகிய எம்.பி. தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.
முன்பு 42 தொகுதிகளாக இருந்து வந்த தனித் தொகுதிகள் தற்போது 44 ஆக உயர்ந்துள்ளன. இந்தத் தனித் தொகுதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான தொகுதிகள் 2 ஆக உள்ளன.
சேப்பாக்கம் பெயர் மாறியது
முதல்வர் கருணாநிதியின் தொகுதியான சேப்பாக்கம் தொகுதியின் பெயர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என மாற்றப்பட்டுள்ளது.
மறு சீரமைப்புப் பணியின்போது திருவல்லிக்கேணி தொகுதி ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் சென்னை மாநகரின் பழமையான பகுதிகளில் ஒன்றான திருவல்லிக்கேணியின் பெயர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை வந்தது.
இதையடுத்து தற்போது திருவல்லிக்கேணி என்ற பெயர் சேப்பாக்கம் தொகுதியுடன் சேர்க்கப்பட்டு விட்டது. அதன்படி சேப்பாக்கம் தொகுதி இனி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என அழைக்கப்படும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications