29வது இடத்திற்கு முன்னேறினார் சானியா
லாஸ் ஏஞ்செலஸ்சர்வதேச மகளிர் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் சானியா மிர்ஸா ஒரு இடம் முன்னேறி 29வது இடத்திற்கு வந்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சானியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான வெற்றிகளைக் குவித்து வருகிறார். கடந்த இரு மாதங்களில் அவர் பங்கேற்ற 3 தொடர்களில் பெருமளவில் வெற்றிகளைக் குவித்தார். நான்கு முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.இதன் உச்சகட்டமாக முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தினார். இதன் காரணமாக தரவரிசைப் பட்டியலில் சானியாவுக்கு ஒரு இடம் முன்னேறி 29வது இடம் கிடைத்துள்ளது.
இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 25வது இடம் கிடைத்துள்ளது. இன்னொரு வீராங்கனையான சுனிதா ராவ் 220வது இடத்திலும், ஷிகா ஓபராய் 330வது இடத்திலும் உள்ளனர்.
ரோஜர்ஸ் மாஸ்டர்ஸ்: பூபதி இணை சாம்பியன்
இதற்கிடையே, கனடாவின் மான்ட்ரீல் நகரில் நடந்த ரோஜர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ்பூபதி, செக் குடியரசின் பாவெல் விஸ்னர் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இவர்கள் இருவரும் ஜோடி சேருவது இதுவே முதல் முறையாகும். முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர். இறுதிப் போட்டியில் பூபதி ஜோடி, ஜிம்பாப்வேயின் கெவின் உலிட், ஆஸ்திரேலியாவின் பால் ஹேன்லி ஜோடிைய சந்தித்தது.
கனடாவில் பூபதி சந்திக்கும் ஐந்தாவது வெற்றி இது. இதற்கு முன்பு 1997,2003, 2004 ல் நடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பூபதி பெறும் 40வது சாம்பியன் பட்டம் இது. இதில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களும் அடக்கம். 50 சாம்பியன் பட்டங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதன் பின்னர் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளாகவும் பூபதி கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications