தஸ்லிமாவை நாடு கடத்தக் கோரி போராட்டம்
சென்னை:வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினை நாடு கடத்தக் கோரி தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் முழக்கப் போராட்டம் நடத்தப்பட்டது.
![]() |
சென்னை மெமோரியல் ஹால் எதிரே ஜமாத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.எம்.பேக்கர் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
தஸ்லிமா, முஸ்லீம்களின் உணர்வுகளை காயப்படுத்தியவர். அவர் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது. உடனடியாக அவரை நாடு கடத்த வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர்.
போராட்டத்தின்போது பேக்கர் பேசுகையில், தஸ்லிமாவை நாடு கடத்தும் வரை முஸ்லீம்கள் போராட்டம் நடத்துவர். முஸ்லீம் பெண்கள் குறித்து தஸ்லிமா கூறியுள்ள கருத்துக்கள் முஸ்லீம் சமுதாயத்தை காயப்படுத்தியவை ஆகும் என்றார் அவர்.
மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்:
இந் நிலையில் ஹைதராபாத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், தஸ்லிமா நஸ்ரின் தாக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்டு ஹைதராபாத் காவல்துறை ஆணையருக்கு, அம்மாநில மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் வரும் செப்டம்பர் 17ம் தேதிக்குள் தாக்குதல் குறித்து அறிக்கை அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications