காதில ஆலை திருட்டு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
கரூர்:கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித் தாள் நிறுவன (டி.என்.பி.எல்) குடியிருப்பு வளாகத்தில் நடந்த திருட்டு வழக்கை துப்பு துலக்குவதில் போலீஸார் சரிவர செயல்படாத காரணத்தால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய காகித ஆலை கருரில் உள்ள டி.என்.பி.எல். ஆலை. இந்த ஆலையில் பல ஆயிரம் தொழிலாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
ஆலையில் பணியாற்றும் தொழிலாலர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்காக ஆலை வளாகத்திலேயே குடியிருப்பு உள்ளது. 24 மணி நேரமும் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டது.
இந்நிலையில் ஆலையில் பணியாற்றும் சுப்பிரமணியஸ்வரலு என்பவரது வீட்டில் ரூ 2.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிக்கொண்டு சென்று விட்டனர்.
இது குறித்து சுப்பிரமணியஸ்வரலு மனைவி ரஜினி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் கடந்த 3 வருடங்களாக இத்திருட்டில் சம்பந்தப் பட்டவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் இவ் வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டி ரஜினி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூரியா வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்திரவிட்டார்.












Click it and Unblock the Notifications