மணிலாவில் ஆதித்யா பிர்லா மினாக்ஸ் கிளை
மணிலா:ஆதித்யா பிர்லா குழுமத்தின் மினாக்ஸ் (முந்தைய பெயர் டிரான்ஸ்வொர்க்ஸ்) நிறுவனக் கிளையை மணிலாவில் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் குளோரியா மெகபாகல்-அர்ரோயா திறந்து வைத்தார்.
இது ஆதித்யா பிர்லா நிவோ நிறுவனத்தின் துணை அமைப்பாகும்.
உலகம் முழுவதும் 30 கிளைகளைக் கொண்டுள்ள இந் நிறுவனத்தின் மணிலா கிளையில் 200 பேர் பணியாற்றுவர்.
உலகலாவிய அளவில் வாடிக்கையாளர் சேவையில் மணிலா கிளை பெரும் பங்கு வகிக்கவுள்ளது.
இதன் துவக்க விழாவில் பேசிய ஆதித்யா பிர்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி சரத் ஜுங்கரே பேசுகையில்,
மிகச் சிறந்த மனித வளம், அடிப்படைக் கட்டமைப்பு வசதி, அரசின் ஆதரவு ஆகியவை காரணமாக எங்களது நிறுவனத்துக்கு பிலிப்பைன்ஸ் மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.
இதற்காக பிலிப்பைன்ஸ் அரசுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். உலக அளவில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்கவும் எங்கள் தொழில் அதிவேகத்தில் வளர்ச்சி காணவும் இந்தக் கிளை உதவும் என்றார்.
முன்னதாக குத்துவிளக்கை ஏற்றி வைத்து இந்த கிளையை தொடங்கி வைத்தார் அதிபர் குளோரியா. பின்னர் பணியாளர்களுடனும் அவர் மிக இயல்பாக உரையாடினார்.
ஆதித்யா பிர்லா மினாக்ஸ் வோர்ல்ட் வைட் நிறுவனம் கனடா, ஜெர்மனி, ஹங்கேரி, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள நிறுவனமாகும். இதில் 11,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, நிதி, உள்பட பல்வேறு பிரிவுகளில் 28 மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications