இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:இந்தோனேஷியா அருகே கடலுக்கடியில் மூன்று முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இந்திய நேரப்படி நேற்று இரவு 11.56 மணிக்கு முதல் நில நடுக்கம் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையே கடலுக்கடியில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.9 என்ற அளவுக்குப் பதிவானது.
இதையடுத்த 8 மணி நேரத்தில் இன்று காலை இந்தோஷேனியாவின் கிழக்கே பாண்டா கடல் பகுதியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இவை ரிக்டர் அளவுகோளில் 5.8, 6.2 என்ற புள்ளிகள் அளவுக்குப் பதிவாயின.












Click it and Unblock the Notifications