கட்டாய இந்தி: கைவிட்டது சிண்டிகேட் வங்கி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சிண்டிகேட் வங்கி வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இந்தி தகுதி சான்றிதழ் தேவை என்ற நிபந்தனையை அந்த வங்கி வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து வங்கியை கண்டித்து நடத்த இருந்த போராட்டத்தை விடுதைலச் சிறுத்தைகள் வாபஸ் பெற்றுள்ளனர்.

கர்நாடகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட சிண்டிகேட் வங்கியில் எழுத்தர்கள் மற்றும் அலுவலர்களுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளன.

இதற்கு விண்ணப்பிப்போர் இந்தி மொழியைக் கற்றிருக்க வேண்டும் எனவும் அதற்குரிய தகுதிச் சான்றிதழை இணைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

வங்கியின் இந்தப் போக்கைக் கண்டித்து சிண்டிகேட் ஊழியர்கள் ஆங்காங்கே எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந் நிலையில் இது தமிழகத்தில் இந்தியைத் திணிக்க நடக்கும் முயற்சி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழகத்தில் கிளைகள் நடத்திக் கொண்டு, தமிழர்கள் வேலையில் சேர தகுதியில்லையென்று கூறி அவர்களைப் புறக்கணிக்கும் வஞ்சக செயலில் வங்கி ஈடுபட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதனால் இந்த வங்கியில் வைப்பு நிதியாக வைத்துள்ள தமிழக அரசின் ஒட்டு மொத்தத் தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோரிய திருமா வங்கியை எதிர்த்து வரும் 20ம் தேதி பேராட்டத்தையும் அறிவித்திருந்தார்.

ேமலும் வங்கியின் உத்தரவுக்கு முதல்வர் கருணாநிதி, தி.க. தலைவர் கி.வீரமணி ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந் நிலையில் வங்கியின் தேர்வுகளுக்கு இந்தி படித்ததற்கான தகுதிச் சான்றிதழ் தேவையில்லை என சிண்டிகேட் வங்கி அறிவித்துள்ளது.

தனது நிபந்தனையை சிண்டிகேட் வங்கி திரும்பப் பெற்றதற்கு நன்றி தெரிவித்துள்ள திருமாவளவன் பேராட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+