இந்திய கிரிக்கெட் லீக்கில் பாக், நியூசி வீரர்கள்:கபில்தேவ் பட்டியலை வெளியிட்டார்
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குப் போட்டியாக, கபில்தேவை தலைவராக கொண்டு, ஜீ டிவி உரிமையாளர் சுபாஷ் சந்திரா உருவாக்கியுள்ள இந்திய கிரிக்கெட் லீக்கில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்து ஒட்டுமொத்த இந்தியர்களின் வசவுகளையும் சம்பாதித்தது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள திறமையான வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தப் போவதாக ஜீ டிவி நிறுவனம் அறிவித்தது.
இந்த போட்டிகளை நடத்துவதற்காக இந்திய கிரிக்கெட் லீக் அமைக்கப்படும் எனவும், இதில் வெளிநாட்டு வீரர்களும் இடம்பெறுவர் என்றும் அது அறிவித்தது. ரூ. 100 கோடி பணத்தை இதில் கொட்டப் போவதாகவும் ஜீ டிவி அறிவித்தது.
இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதை சுபாஷ் சந்திரா கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதிரடியாக, கபில்தேவ் இதன் தலைவராக இருப்பார் என்று அறிவித்தார். மேலும் தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் வீரர் எர்ரபள்ளி பிரசன்னா நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து கபில் தேவுக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்தது. கிரிக்கெட் வாரியப் பொறுப்புகளிலிருந்து கபில் தேவ் நீக்கப்படுவார் என அது எச்சரித்தது.
முடிந்தால் நீக்கிப் பாருங்கள், அதற்கு உங்களுக்குத் தைரியம் உள்ளதா என்று கபில் தேவ் சவால் விட்டார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் லீக்கில் பல வீரர்கள் சரமாரியாக இணைந்தனர். இதுதொடர்பாக பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. முதல் வீரராக பிரையன் லாரா இணைந்தார்.
இந்த நிலையில் நேற்று மும்பையில் இந்திய கிரிக்கெட் லீக்கில் இணைந்துள்ள வீரர்களின் முதல் பட்டியலை கபில்தேவ் வெளியிட்டார்.
அதன்படி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், முன்னணி வீரர்கள் முகம்மது யூசுப், அப்துல் ரஸ்ஸாக், இம்ரான் பர்ஹத் ஆகியோர் இந்திய கிரிக்கெட் லீக்கில் இடம்பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் ஸ்டீபன் பிளமிங், கிறிஸ் கெய்ன்ஸ் ஆகியோரும் லீக்கில் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்க வீரர்கள் லான்ஸ் க்ளூஸ்னர், நிக்கி போயேவும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
கபில்தேவ் வெளியிட்ட முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்
பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக், அப்துல் ரஸ்ஸாக், இம்ரான் பர்ஹத், முகம்மது யூசுப், லான்ஸ் க்ளூஸ்னர், நிக்கி போயே, திணேஷ் மோங்கியா, ஜே.பி.யாதவ், தீப் தீஸ் குப்தா, தட்சிணாமூர்த்தி குமரன், திருநாவுக்கரசு குமரன், தீரஜ் ஜாதவ், அம்பட்டி ராயுடு, அப்பாஸ் அலி, அபிஷேக் ஜூன்ஜுன்வாலா, அவினாஷ் யாதவ், ரிதீந்தர் சோதி, ஹேமந்த்குமார், இந்தர் சேகர் ரெட்டி, இஷான் மல்ஹோத்ரா, கெளசிக் ரெட்டி, லஷ்மி ரத்தன் சுக்லா, மணீஷ் சர்மா, முகம்மது இப்ராகிம், மோனிஷ் மிஸ்ரா, ராபின் மாரிஸ், ஆல்பிரட் அப்சோலம், அலி முர்தஸா, சஷாங் நாக், சிப் சாகர் சிங், அபிஜித் ஷெட்யே, சுமித் கலியா, டி.பி.சுதீந்திரா, சரப்ஜித் சிங், தேவிஷெட்டி வினய் குமார், யஷ்பால் சிங், ஹரீஷ், சதீஷ், ராஜேஷ் சர்மா, ரஞ்சீத் கிரீட், சச்சின் தோல்புரே, சலாப் ஸ்ரீவத்சவா, ஷ்ரேயாஸ் கண்டோல்கர், சுபோஜித் பால், சுபோமாய் தாஸ், ரவிராஜ் பாட்டீல், புஷ்பராஜ் மோகன் ஜோஷி, சையத் அகமது.
51 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த திணேஷ் மோங்கியா, ஜே.பி.யாதவ், தீப் தாஸ்குப்தா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் லீக்கில் இடம் பெற்றிருப்பது குறித்து திணேஷ் மோங்கியா கூறுகையில், இந்திய அணியில் நான் சரிவர இடம் பெறவில்லை. என்னைப் பொருத்தவரை கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பதை விரும்புகிறேன்.
இந்திய அணியாக இருந்தாலும் சரி, லீக் அணியாக இருந்தாலும் சரி கிரிக்கெட் விளையாடுவதையே நான் விரும்புகிறேன். இந்திய அணியில் எனக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டால், மீண்டும் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
மேலும் பல முன்னணி வீரர்கள் லீக்கில் இடம் பெறவிருப்பதாக கூறப்படுகிறது. லீக்கில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஒரு சீசனுக்கு ரூ. 80 லட்சம் சம்பளம் மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கிறது லீக். தற்போது கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு ஆண்டுக்கு தோராயமாக ரூ. 30 லட்சம் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications