இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!!
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கும்பகோணம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு கும்பகோணம் மேற்கு போலீஸ் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார் வெற்றிச் செல்வன். இவர் பணிபுரிந்த காலத்தில் 5 திருட்டு வழக்குகளைப் பதிவு செய்தார். அந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு குற்றப் பத்திரிக்கைகளையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல 6 முறை சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயந்தி, இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
தற்போது இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன் மதுரை தல்லாகுளம் போலிஸ் இன்ஸ்பெக்டராக உள்ளார்.












Click it and Unblock the Notifications