திமுகவில் இணைந்த கோமதி முத்துராணி துரைச்சி!
வாசுதேவநல்லூர்:சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவரான வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் கோமதி முத்துராணி துரைச்சி நடராஜன் நடத்தி வந்த அறக்கட்டளையில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் கிராமத்தில் மன்னர் புலித் தேவன் மாளிகை உள்ளது. இங்கு அவரது வாரிசுகள் வசித்து வருகின்றனர்.
வருடந்தோறும் இங்கு மன்னர் புலித் தேவன் பிறந்த நாள் விழாவை "புலித்தேவர் அறக்கட்டளை" என்ற அமைப்பை நடத்தி வரும் சசிகலாவின் கணவர் நடராஜன் விமரிசையாகக் கொண்டாடுவார்.
இந்த அறக்கட்டளையின் பொருளாளராக நெற்கட்டும்செவல் ஜமீன் குடும்பத்தின் வாரிசு உள்ளமுடையார் துரையின் மகள் கோமதி முத்து நாச்சியார் என்ற ராணி துரைச்சி இருந்து வருகிறார். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.
பின்னர் திமுகவின் ஆதரவோடு யூனியன் சேர்மன் ஆனார். இப்போது திமுகவில் இணைந்துள்ளார்.
மன்னன் புலித்தேவன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரியுள்ள இவர் நடராஜன் நடத்தி வரும் புலித் தேவர் அறக்கட்டளையின் பொருளாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மன்னன் புலித்தேவன் பிறந்த நாள் தினம் நெருங்கி உள்ள நிலையில் அவரது வாரிசு அந்த அமைப்பிலிருந்து விலகியது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான் கடந்த 10 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றினேன். தற்போது சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று வாசுதேவநல்லூர் யூனியன் தலைவராக பணியாற்றி வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக பூலித் தேவரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வந்தேன்.
நான் திமுக மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளேன். எனவே பூலித்தேவர் பிறந்த நாள் அறக்கட்டளை பொருளாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இதுவரை அவரின் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த ஆண்டு பூலித் தேவரின் பிறந்த நாளை அரசு விழாவாக ஏற்று நடத்த முயற்சிகள் நடந்து வருகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications