மறுபடியும் மாப்பிள்ளை ஆகிறார் இம்ரான்கான்!
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரா கான் மீண்டும் திருமணம் செய்யவுள்ளார்.
கிரிக்கெட்டில் மட்டுமல்லாது, பெண்களைக் கவருவதிலும் கில்லாடி இம்ராகன் கான். அவர் ஆடிய காலத்தில் பலருடன் இணைத்துப் பேசப்பட்டவர்.ஆரம்பத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த சிதா ஒயிட் என்பவரைக் காதலித்தார். இருவரும் ரகசியத் திருமணமும் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இம்ரான் மூலம் ஒயிட்டுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
ஆரம்பத்தில் அது எனது மகளே அல்ல என்று கூறி வந்தார். ஆனால் கோர்ட்டுக்கு விவகாரம் போன பின்னர் அது எனது மகள்தான் என்பதை ஒத்துக் கொண்டார் இம்ரான்.
இருந்தாலும் ஒயிட்டுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை இம்ரான். இதனால் இருவரும் கமுக்கமாக பிரிந்து விட்டனர். பின்னர் சிதா ஒயிட் 43 வயதில் காலமாகிவிட்டார்.
இந் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமீனாவை காதலித்து கை பிடித்தார் இம்ரான். இம்ரானுக்காக முஸ்லீமாகவும் மதம் மாறினார் ஜெமீமா. இருவரும் சந்தோஷமாக குடும்பமும் நடத்தி வந்தனர்.
ஆனால் இந்த வாழ்க்கையும் நாளடைவில் கசக்க ஆரம்பித்தது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். ஜெமீமா மூலம் இம்ரானுக்கு காசிம், சுலைமான் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மறு மணம் குறித்து சிந்திக்க ஆரம்பித்துள்ளார் இம்ரான். அவரது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட குடும்பத்தினரும் சூட்டபிளான பெண்ணை பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்த முறை பெண், பாகிஸ்தானைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்கிறார்கள்.
இந்த மறுமணமாவது நறுமணமாக இருக்க வாழ்த்துவோம்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications