ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தடியடி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:இலங்கையில் தடையை மீறி அதிபர் வீட்டை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

இலங்கை அரசு விதித்துள்ள புதிய கல்வி வரியை ரத்து செய்யக் கோரியும், பல்கலைக்கழகங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரக் கோரியும் இந்தப் முற்றுகைப் போராட்டம் நடந்தது.

கொழும்பு நகரில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த சுமார் 2,000 மாணவர்கள் கூடி திடீரென லிப்டன் பகுதியில் உள்ள அதிபர் ராஜபக்சே வீட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.

ஆனால் பாதுகாப்புக்கு நின்ற இலங்கை ராணுவத்தினர் ராஜபக்சேவின் மாளிகையை நெருங்க விடாமல் தடுத்தனர். ஆனால் போலீசாரின் கட்டுப்பாட்டை அதிபர் வீட்டை நோக்கிச் சென்றதால், மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டை வீசியும் அவர்களை கலைத்தனர்.

போலீசார் வீசிய கண்ணீர் புகை குண்டுகளில் வெடிக்காதவைகளை பொறுக்கி எடுத்து மீண்டும் போலீசார் மீதே மாணவர்கள் வீசினர். இதனால் போலீசாரும், ராணுவத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துள்ளனர்.

ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலையில் அமர்ந்தும் மறியல் செய்தனர். இந்த மோதலில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+