சென்னையில் இன்னொரு கிரகலட்சுமி;2 பேரைக் கல்யாணம் செய்து பரபரப்பு!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:எம்.பி.ஏ படித்த பெண் இரு நபர்களை அடுத்தடுத்து பதிவுத் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். போலீஸாரின் அறிவுரையை ஏற்று தற்போது முதலில் பதிவுத் திருமணம் செய்து கொண்ட கணவருடன் சேர்ந்து வாழ அவர் தீர்மானித்துள்ளார்.

சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் மாதங்கி. எம்.பி.ஏ படித்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந் நிலையில், சூளைமேட்டைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணனைக் காதலித்தார் மாதங்கி. வெங்கடகிருஷ்ணன் மஸ்கட்டில் பணியாற்றி வருகிறார்.

இருவரும் யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் வெங்கடகிருஷ்ணன் மஸ்கட் போய் விட்டார். இந்த நிலையில் ராயப்பேட்டையைச் சேர்ந்த பிரதாப் என்பவர் மீது காதல் கொண்டுள்ளார் மாதங்கி. இருவரும் டீப்பாக காதலித்தனர். பின்னர் பிரதாப்பையும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார் மாதங்கி.

இப்படி அடுத்தடுத்து இருவரைத் திருமணம் செய்து கொண்ட மாதங்கி சத்தம் போடாமல் தனது வேலையைப் பார்த்து வந்தார்.

இந் நிலையில், வெங்கடகிருஷ்ணன் சென்னை திரும்பினார். ஊரறிய திருமணம் செய்ய விரும்பிய அவர் தனது வீட்டாரிடம் மாதங்கி குறித்துத் தெரிவித்து கல்யாண ஏற்பாடுகளைத் தொடங்க கோரினார்.

அவர்களும் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியபோதுதான் மாதங்கியின் 2வது பதிவுத் திருமணம் குறித்தத் தகவல் தெரிய வந்து அதிர்ந்தனர். இதையடுத்து குழப்பம் ஏற்பட்டது. மாம்பலம் காவல் நிலையத்திற்குப் பிரச்சினை போனது.

மாதங்கி மற்றும் அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்ட வெங்கடகிருஷ்ணன் மற்றும் பிரதாப்பை வரவழைத்து போலீஸார் விசாரித்தனர். நான்தான் முதலில் திருமணம் செய்தவன், எனவே மாதங்கி எனக்கே சொந்தம் என்றார்.

ஆனால் பிரதாப்போ, வெங்கடகிருஷ்ணனை மாதங்கி மணந்திருந்தாலும், அவரைப் பிடிக்காத காரணத்தால்தான் என்னைத் திருமணம் செய்து கொண்டார். எனவே அவர் எனக்கே சொந்தம் என்றார்.

இதனால் காவல் நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மாதங்கியின் முடிவு என்ன என்று போலீஸார் கேட்டனர். மேலும், சட்டப்படி பார்த்தால் வெங்கடகிருஷ்ணன்தான் அதிகாரப்பூர்வ கணவராக முடியும். 2வது பதிவுத் திருமணம் செல்லாது என்று போலீஸார் மாதங்கிக்கு அறிவுரை கூறினர்.

இந் நிலையில்தான் அதிரடியான முடிவை தெரிவித்தார் மாதங்கி. அதாவது இரண்டு கணவர்களுடனும் வாழப் போவதில்லை, எனது அப்பா, அம்மாவுடனேயே செல்கிறேன் என்று அவர் குண்டைத் தூக்கிப் போட போலீஸார் மட்டுமல்ல, அவரை நம்பி கழுத்தை நீட்டிய இரு கணவர்களும் கூட பீதியாகி விட்டனர்.

பின்னர் தனது தந்தையுடன் வீட்டுக்குப் போய் விட்டார் மாதங்கி.

எப்படியும் அவர் மனம் மாறி யாராவது ஒரு கணவரை ஏற்றுக் கொள்வார், குறிப்பாக வெங்கடகிருஷ்ணனுடன் சேர்ந்து வாழ அதிக வாய்ப்புகள் உள்ளதாக போலீஸார் நம்பினர்.

இந்த நிலையில் நேற்று தனது முதல் கணவர் வெங்கடகிருஷ்ணனுடன் காவல் நிலையத்திற்கு ஜோடியாக வந்தார் மாதங்கி.

போலீஸாரை சந்தித்த மாதங்கி, நான் எனது முதல் கணவருடனேயே சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளேன். உறவினர்கள் புடை சூழ அவரை மணந்து கொண்டு அவருடனேயே மஸ்கட் சென்று குடும்பம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார் மாதங்கி.

போலீஸார் கூறிய அறிவுரைகளை யோசித்துப் பார்த்து இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறினார் மாதங்கி.

கைக்குக் கிடைத்தும் வாய்க்குக் கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த 2வது கணவர் பிரதாப், பரவாயில்லை என்று பெருந்தன்மையாக கூறி இருவரையும் வாழ்த்தி விட்டு காவல் நிலையத்திலிருந்து கிளம்பிப் போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+