சேலம் கோட்டம்: லாலு, வேலு வீடுகளைமுற்றுகையிடுவோம்- புதிய தமிழகம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
கோவை:சேலம் ரயில்வே கோட்டம் திட்டமிட்டபடி தொடங்கப்படாவிட்டால் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் டெல்லி சென்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இணை அமைச்சர் வேலு ஆகியோரின் வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி எச்சரித்துள்ளது.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,
திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி சேலம் கோட்டம் தொடங்கப்பட வேண்டும்.
சேலம் கோட்டத்தில் கோவை இணைக்கப்பட வேண்டும். இது நடக்காவிட்டால், அடுத்த மாதம் 6ம் தேதி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் டெல்லி சென்று லாலு பிரசாத் யாதவ், வேலு மற்றும் இன்னொரு ரயில்வே இணை அமைச்சர் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications