மகனைக் காப்பாற்ற முயன்று ரயிலிலிருந்துதவறி விழுந்த பெண் பரிதாப சாவு
வேலூர்:தனது மகன் ரயிலிலிருந்து கீழே விழுந்து விடாமல் காப்பாற்றப் பாய்ந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பீகாரைச் சேர்ந்த எம்.கே.ஷா, பெங்களூரில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா ஷா (26). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
விடுமுறைக்காக ஷா தனது குடும்பத்துடன் பீகார் சென்றிருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் சேருவதற்காக பெங்களூருக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.
இவர்கள் பயணித்த முஷாபர்பூர் - யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வேலூர் அருகே உள்ள லத்தேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது தனது இரு மகன்களுக்கும் முகம் கழுவி விட அவர்களை அழைத்துக் ெகாண்டு வந்தார்.
அப்போது அவர்களில் ஒரு மகன் அம்மாவின் கையை உதறி விட்டு வேகமாக ஓடினான். அவன் கீழே விழுந்து விடப் போகிறானோ என்று அஞ்சிய அனிதா ஷா, அவனைப் பிடிக்க ஓடினார். அப்போது ரயில் வாசல் படிக்கு அருகே உள்ள கதவு தட்டி, ரயிலிலிருந்து கீழே விழுந்து விட்டார்.
இதைப் பார்த்து அலறிய பயணிகளும், ஷாவும் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தினர். ரயில் வேகமாக போய்க் கொண்டிருந்ததால், சிறிது தூரம் ஓடிய பிறகு நின்றது.
கீழே இறங்கி பார்த்தபோது அனிதா ஷா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அனைவரும் கதறி அழுதனர்.
ரயில்வே போலீஸார் விரைந்து வந்து அனிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications