10ம் வகுப்பு வரை கட்டாய தமிழ்:தமிழக அரசின் சட்டம் செல்லும்!
சென்னை:முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் என்ற தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிக் கூடங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயம் ஒரு பாடமாக போதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு தமிழ் உணர்வாளர்கள், தமிழறிஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த சட்டத்தை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜம், நாயர் சேவைக் கழகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு இந்த சட்டத்தை உள்நோக்கத்துடன் கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் மொழியால் சிறுபான்மையினரின் உரிமைக்கு எதிராக உள்ளது. அரசியல் சட்டம் 29 மற்றும் 30வது பிரிவுக்கு முரணாக உள்ளது.
இந்த சட்டம் சிறுபான்மையினர் தங்களது தாய்மொழியைக் கற்க மறுக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் மனுக்கள் அனைத்தையும் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பில், அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மறுக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. 1-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் படாமாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 1ம் வகுப்பில் ஒரு மாணவனுக்கு தமிழைக் கற்றுத் தரும்போது அது சுமையாக இருக்காது, மாறாக எளிதாகத்தான் இருக்கும்.
குழந்தைளின் ஆளுமைத் திறனை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கும் கடமை அரசுக்கு உள்ளது. இந்த சட்டத்தை நியாயமற்றது என்று கூறுவதை ஏற்க முடியாது.
தமிழகத்தில் தமிழ்தான் அன்றாட நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நடவடிக்கைகள் சுமூகமாக நடப்பதற்கும், அலுவல் தொடர்பு எல்லாமே தமிழ் மொழியில்தான் உள்ளன. எனவே தமிழ் மொழியை புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
கல்வி குறித்து சட்டசபைதான் முடிவெடுக்க வேண்டும். சட்டசபை மூலம் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.
சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழியை பயிற்று மொழியாக எடுக்க அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை, அதில் தலையிடவில்லை. ஆகவே தமிழை ஒரு பாடமாக எடுத்து கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், இதைப் படிப்படியாக நிறைவேற்றும் வகையிலும், தமிழக அரசு கொண்டு வந்த சட்டம், மொழியால் சிறுபான்மையினருக்கிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. எனவே இந்த சட்டம் செல்லும் என்று நீதிபதிகளின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications