என்.டி.ஆர் பேத்தியை மணக்கிறார் நாயுடுவின் மகன்
ஹைதராபாத்:ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் திருமணம் நாளை ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.
நாயுடுவின் மகன் லோகேசுக்கும் நடிகரும் மறைந்த என்.டி.ராமாராவின் மகனுமான பாலகிருஷ்ணாவின் மகள் பிரமணிக்கும் திருமணம் நடைபெறுகிறது. லேகேஷ், ராமாராவின் மகள் வயிற்றுப் பேரனாவார். மாமாவின் மகளை மணக்கிறார் லோகேஷ்.
இவர்களின் திருமணம் நாளை ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டியில் நடைபெறவுள்ளது. அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் இதில் கலந்து ெகாள்ளவுள்ளனர்.
திருமணத்தையொட்டி என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவின் நண்பரான கதிரிபாபு ராவ் வீட்டில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமிதாப் குடும்பத்தினர் உட்பட முக்கியமான விஐபிக்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் லோகேஷும், பிரமணியும் இணைந்து டான்ஸ் ஆடினர். மேலும் குடும்பத்தினரும் இந்த ஆட்டம், பாட்டத்தில் பங்கேற்றனர். சந்திரபாபு நாயுடுவையும் வந்து ஆடுமாறு பாலகிருஷ்ணா வற்புறுத்தவே அவரும் எழுந்து சிறிது நேரம் ஆட்டத்தைப் போட்டு அசத்தினார்.
இந்த திருமணத்திற்கு ஏராளமான ரசிகர்களும், அரசியல் பிரமுகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் வரவிருப்பதால் ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications