அரசுப் பேருந்தை தள்ளிய முதியவர்:மயங்கி விழுந்து சாவு
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில், பிரேக் டவுன் ஆன அரசுப் பேருந்தை சக பயணிகளுடன் சேர்ந்து தள்ளிய முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஐசக் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் ராஜ்(62). இவர் நாசரேத்திலிருந்து வெள்ளாளன்விளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல அரசு பேருந்தில் ஏறினார்.
அப்போது பேருந்து மெய்ஞ்ஞானபுரம் அருகே சென்றபோது திடீரென பழுதடைந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழிறங்கி பேருந்தைத் தள்ளியுள்ளனர். அப்போது சாமுவேல்ராஜனும் தனது வயதைப் பொருட்படுத்தாமல் பேருந்தைத் தள்ளியுள்ளார்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். உடனடியாக பயணிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
ஓட்டை அரசுப் பேருந்தால் ஒரு அப்பாவி பெரியவரின் உயிர் பறிபோனது பயணிகளுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications