ஹைதராபாத்: குண்டுவெடிப்பில் வேதிப்பொருள்நியோஜெல் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு!
ஹைதராபாத்:ஹைதாரபாத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நியோஜெல் -90 என்கிற அதி நவீன ரசாயனப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஹைதாரபாத்தில் நடந்த இரட்டை வெடிகுண்டுச் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியை முற்றுகையிட்டுள்ள தனிப்படை போலீஸார் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து பல முக்கிய துப்புகளைத் திரட்டியுள்ளது.
இரு இடங்களிலும் தனிப்படை போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், இரு இடங்களிலும் வெடித்த குண்டுகளில் என்ன பொருள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.
மிகவும் அபாயகரமான வேதிப் பொருளான நியோஜெல் -90 என்ற வேதிப் பொருளைப் பயன்படுத்தி இந்தக் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர் தீவிரவாதிகள்.
நாக்பூர் நகரில் உள்ள அமீன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தில்தான் இந்த வேதிப் பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை யாரோ வாங்கி ஹைதராபாத் அனுப்பி வெடிக்கச் செய்துள்ளனர்.
குவார்ஸ்ட் கடிகாரம் ஒன்றை டைமராகப் பயன்படுத்தி இந்த வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. விரைவில் யார் குண்டுவெடிப்புக்குக் காரணம் என்பதை கண்டுபிடிப்போம் என ஹைதராபாத் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications