வேலை தருவதாக கூறி 30 பேரிடம்ரூ. 30 லட்சம் பண மோசடி - ஒருவர் கைது
தூத்துக்குடி:வேலை தருவதாக கூறி தூத்துக்குடியில் ரூ.30 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் டேவிட். இவர் செயிண்ட் மேரிஸ் பவுண்டேசன் சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற அமைப்பை தொடங்கினார். பின்னர் அந்த டிரஸ்ட் சார்பில் கல்லூரி தொடங்கவிருப்பதாகவும், அதில் பணி புரிய வார்டன், துணை வார்டன் தேவை என்று பல நாளிதழ்களில் விளம்பரம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்டோர் அவரிடம் ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கட்டி பணிக்கு விண்ணப்பித்தனர்.
ஆனால் பணத்தை வாங்கியதோடு அவர்களை மறந்து விட்டார் டேவிட். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அனைவரும் தூத்துக்குடி போலீசில் புகார் செய்தனர். தலைமறைவாகி விட்ட டேவிட்டை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவரிடம் பணம் கொடுத்த ஏமாந்த சுந்தர பாண்டியன் மற்றும் கலைச் செல்வி ஆகியோர் டேவிட்டை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
டேவிட் ரூ. 30 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. அவரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications