கலர் டிவி முறைகேடு - பொதுமக்கள் முற்றுகை
கடையநல்லூர்:நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே இலவச கலர் டிவி வழங்குவதில் ஏற்பட்ட முறைகேட்டைக் கண்டித்து பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி தேன்பொத்தை கிராமத்தில் இலவச கலர் டிவி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அக்கிராமத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் தேன்பொத்தை கிராம ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் 1 மாதத்திற்குள் விடுபட்டவர்களுக்கு கலர் டிவி வழங்கப்படும் என்று தெரிவித்ததால் பொது மக்கள் சமாதானம் அடைந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கலர் டிவி வழங்குவது தொடர்பாக பெருமளவில் முறைகேடுகள் நடக்கின்றன. இதை சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தலையீட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications